/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்
/
ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்
ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்
ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்
ADDED : ஏப் 14, 2025 05:41 AM

திருப்பூர் : திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் தெரிவித்த ஆலோசனைகளின் படி கட்டட கட்டுமானத்தில் திருத்தரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூர் காமராஜ் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இவ்வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதில் உள்ள கடைகளுக்கான ஏலம் விடும் பணி இழுபறியாகவே உள்ளது. மார்க்கெட் கட்டட கட்டுமானத்தில் சில மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் சில ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.கடந்த வாரம் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக வளாகத்தில் கூடுதல் கழிப்பறைகள்; கடைகள் அமைந்துள்ள பகுதியில் கூடுதல் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துக்காக ஜன்னல் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.