/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி குறைக்க வேண்டும்; வியாபாரிகள் சங்கத்தினர் மனு
/
சொத்து வரி குறைக்க வேண்டும்; வியாபாரிகள் சங்கத்தினர் மனு
சொத்து வரி குறைக்க வேண்டும்; வியாபாரிகள் சங்கத்தினர் மனு
சொத்து வரி குறைக்க வேண்டும்; வியாபாரிகள் சங்கத்தினர் மனு
ADDED : ஜன 07, 2025 07:06 AM
திருப்பூர்; திருப்பூரை தொழில் நசிவிலிருந்து காப்பாற்ற மின் கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை அறிக்கை:மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு ரத்து செய்யக் கோரி கலெக்டர், மேயர், கமிஷனர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே, இது குறித்த அறிவிப்பு வரும் வரை, உயர்த்தப்பட்ட வரியினங்களை கட்ட வேண்டாம்.
திருப்பூர், பனியன் உள்ளிட்ட தொழிற்சாலைகளை நம்பி உள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற காரணங்களால் தொழில்நசிவடைந்து வருகிறது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுகளை ரத்து செய்து திருப்பூரை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.