ADDED : ஏப் 26, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானோருக்கு பல்லடம் அனைத்து வியாபாரிகள் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்தது.
பல்லடம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கண்ணையன் தலைமை வகித் தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வரவேற்றார். துணை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும், உயிரிழந்தவர்களின் படத்துக்கு மலர்துாவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.