/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடைவிரிப்பு; விவசாயிகள் தவிப்பு
/
வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடைவிரிப்பு; விவசாயிகள் தவிப்பு
வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடைவிரிப்பு; விவசாயிகள் தவிப்பு
வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடைவிரிப்பு; விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 06, 2025 06:21 AM

திருப்பூர்; திருப்பூர் வடக்கு உழவர் சந்தை முன்புறம் வியாபாரிகள் கடைவிரிப்பதால், விற்பனை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வடக்கு உழவர் சந்தை உள்ளது. பெருமாநல்லுார், குன்னத்துார், ஊத்துக்குளி, அவிநாசி, தொரவலுார் பகுதி விவசாயிகள் விற்பனைக்கு காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளை கொண்டு வருகின்றனர்; நாள் ஒன்றுக்கு, 15 - 20 டன் காய்கறி விற்பனைக்கு வருகிறது. உழவர் சந்தையின் வெளிப்புறம், வியாபாரிகள் கடை அமைப்பதால், சந்தைக்குள் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சந்தைக்கு வராத
பொதுமக்கள்
விவசாயிகள் கூறியதாவது:
புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் துவங்கி, பி.என்., ரோட்டில் மட்டும் ரோட்டோர கடை அமைத்து வந்தனர். தற்போது சந்தைக்கு வரும் வழியில் இடமிருக்கும் இடங்களில் எல்லாம் வியாபாரிகள் கடை விரித்துக் கொள்கின்றனர். உழவர் சந்தை முன்புறம், நுழைவு வாயில் அருகே, கேட் எதிரில் கடைவிரித்து, கூறு வைத்து காய்கறி விற்கின்றனர். சந்தையை நாடி வருவோர் அங்கேயே வாகனங்களை நிறுத்தி, அப்படியே வாங்கிச் செல்கின்றனர்.
மிஞ்சும் ஏமாற்றம்
உழவர் சந்தை அலுவலர்கள் நிர்ணயித்த குறைந்த விலைக்கு காய்கறி வாங்க வாடிக்கையாளர் வருவோர் என காத்திருக்கும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உழவர் சந்தை முன்பு பாதையை ஆக்கிரமித்து கடை அமைப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை. வருவாய்த்துறை, போலீசார் பெயரளவுக்கு கடைகளை அகற்றுகின்றனர். மறுநாளே ஆக்கிரமிப்பு அதிகமாகி விடுகிறது. குப்பை தொட்டி நுழைவு வாயிலிலேயே உள்ளது. கலெக்டர், சந்தையை நேரில் பார்வையிட்டு நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
---
திருப்பூர் வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடை விரித்துள்ளனர்.