/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை கூடாது: மத்திய அமைச்சருக்கு 'சைமா' கடிதம்
/
வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை கூடாது: மத்திய அமைச்சருக்கு 'சைமா' கடிதம்
வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை கூடாது: மத்திய அமைச்சருக்கு 'சைமா' கடிதம்
வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை கூடாது: மத்திய அமைச்சருக்கு 'சைமா' கடிதம்
ADDED : ஜூலை 18, 2025 11:42 PM
திருப்பூர்; இந்திய பருத்திக்கழகம் - சி.சி.ஐ., இருப்பு வைத்துள்ள பஞ்சை, வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை உடனே நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு, திருப்பூர் 'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த சில வாரங்களாக சூழல் மாறியுள்ளது; பருத்தி விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. சி.சி.ஐ., இருப்பு வைத்துள்ள பருத்தி பஞ்சை, வியாபாரிகள் அதிகம் வாங்கி, இருப்பு வைத்துக்கொண்டிருக்கின்றனர். வரும் ஆக., மாத இறுதிக்குள், சி.சி.ஐ., பஞ்சு இருப்பு தீர்ந்துவிடும்.
பஞ்சு இருப்பு வைத்து வரும் வியாபாரிகள், அதற்கு பிறகு, விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. விலை உயர்வு காரணமாக, உள்நாட்டு ஜவுளி உற்பத்தி மட்டுமல்லாது, ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்படும். பின்னலாடை தொழிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், லட்சக்கணக்கான தொழில் முனைவோரும் பாதிக்கப்படுவர்.
இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.,) உள்நாடு மற்றும் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். நுாற்பாலைகளுக்கு மட்டுமே, பஞ்சு விற்க வேண்டும். தற்போது, வெளிநாடுகளில், பஞ்சு விலை குறைவாக இருக்கிறது. உள்நாட்டில் பஞ்சு விலை அதிகரித்த வண்ணம் இருந்தால், உள்நாட்டு ஜவுளித்தொழில் பாதிக்கும் என்பதை கருத்தில்கொண்டு, வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஜவுளி தொழில் சீராக இயங்க, வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.