/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடமாநிலத்தவர் நிறுவனத்தில் புதுக்கணக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்
/
வடமாநிலத்தவர் நிறுவனத்தில் புதுக்கணக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்
வடமாநிலத்தவர் நிறுவனத்தில் புதுக்கணக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்
வடமாநிலத்தவர் நிறுவனத்தில் புதுக்கணக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்
ADDED : அக் 21, 2025 10:53 PM

திருப்பூர்: 'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படும் திருப்பூர் பின்னலாடை தொழில் நகரம், வந்தாரை வாழ வைக்கும் கேந்திரமாகவும் மாறியுள்ளது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வேலை தேடி வருவோருக்கு, வசதியான வாழ்க்கையை அளிக்கிறது திருப்பூர்.
ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியால், தொழிலாளர் தேவை லட்சக்கணக்கில் உயர்ந்த போது, வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரத்துவங்கினர்.
கடந்த, 2005ம் ஆண்டில் துவங்கிய இப்பணி, தற்போது வாராந்திர சேவையாக மாறிவிட்டது. ஒவ்வொரு வாரமும், தொலைதுார ரயில்கள் வாயிலாக தொழிலாளர் வருகின்றனர். தொழிலாளராக இல்லாமல், சிறு வியாபாரிகளாக வந்தவர்கள், இன்று திருப்பூரின் வர்த்தகர்களாக உயர்ந்துள்ளனர்.
காலணி, பேக், உலர் பழங்கள், சாக்லெட், பேக்கரி, உணவகம், மளிகை, பேன்ஸி கடைகள் என, அனைத்து வியாபாரத்திலும், வடமாநிலத்தவர் கோலோச்சுகின்றனர். திருப்பூர் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வடமாநில தொழில்முனைவோர், பாரம்பரிய பண்டிகையை திருப்பூரிலேயே கொண்டாடும் அளவுக்கு, பின்னி பிணைந்துவிட்டனர்.
ஐப்பசி மாத அமாவாசை அன்று, பாரம்பரிய வழக்கப்படி தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களில் புதுகணக்கு துவக்கி, கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் மாலையே அமாவாசை திதி வந்துவிட்டது. இதனால், வடமாநிலத்தவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு புது கணக்கு துவக்கினர்.
கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில், வாழைக்கன்று நட்டும், மாவிலை தோரணம், மலர்மாலைகளால் அலங்கரித்தனர். சுவாமி படங்களை அலங்கரித்து, பலகாரங்களை படைத்து, புதிய கணக்கை துவக்கி வழிபட்டனர்.
அதன்பின், நண்பர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இரண்டாவது நாளாக நேற்றும் சில கடைகளில் புதுக்கணக்கு துவங்கப்பட்டது.