/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர்சந்தை முன் போக்குவரத்து நெரிசல்
/
உழவர்சந்தை முன் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 22, 2025 05:33 AM
உடுமலை: உடுமலை உழவர்சந்தை முன், காலை நேரங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர். உழவர்சந்தையின் வெளியில், ரோட்டில் காலை நேரங்களில், தற்காலிக காய்கறி உட்பட பல்வேறு கடைகள் போடப்படுகின்றன. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமலும், பிற வாகனங்கள் செல்வதிலும் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

