/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் ரோட்டில் போக்குவரத்து மேம்படும்! தடை பல கடந்து வளர்மதி சுரங்கப்பாலம் பணி தீவிரம் தடை பல கடந்து வளர்மதி சுரங்கப்பாலம் பணி தீவிரம்

ADDED : செப் 25, 2024 10:43 PM

திருப்பூர் : வளர்மதி பாலம் அருகே, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சுரங்கப்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் நகரப்பகுதியானது, நொய்யல் மற்றும் ரயில்பாதை குறுக்கே செல்வதால், மூன்று துண்டுகளாக பிரிந்துள்ளது. இவற்றை இணைக்க, போதிய பாலம் வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், 2006 -2011ல் தி.மு.க., ஆட்சியில், புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
அணைப்பாளையம் மற்றும் காலேஜ் ரோட்டின் குறுக்கே பாலம், ஸ்.ஆர்.சி., மில் பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட் முன் பாலம், கூலிபாளையம் பாலம், வஞ்சிபாளையம் பாலம் என, பல்வேறு பாலம் கட்டப்பட்டது. வளர்மதி பாலம் அகலப் படுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், டி.எம்.எப்., மருத்துவமனை அருகே, சுரங்கவழி பாலமும் கட்டப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைப்பதில், பிரதானமாக இருப்பது குமரன் ரோடு, குமரன் ரோடு மற்றும் நொய்யல் ஆற்றோர ரோடுகளில் வாகனங்கள் தடையின்றி சென்றுவர, சுரங்கப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதாவது, யுனிவர்சல் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், குமரன் ரோட்டின் கீழ், சுரங்கப்பாலம் வழியே பார்க் ரோட்டை சென்றடையும் வகையில், சுரங்கப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது, 9.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. நிலம் எடுப்பில் பல்வேறு தடை ஏற்பட்டதால், 2023 வரை கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, திருத்திய மதிப்பீட்டுடன் பணிகள் நடந்து வருகிறது. பணிகளுக்காக, எம்.ஜி.ஆர்., சிலையை தற்காலிகமாக இடமாற்றி வைக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. யுனிவர்சல் ரோட்டில் வரும் வாகனங்கள், இடதுபுறமாக திரும்பி வளர்மதி பாலம் வழியாக செல்லலாம். முன்கூட்டியே சுரங்கபாலத்தில் இறங்கும் வாகனம், பார்க்ரோடு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வளர்மதி பாலம் அருகே, சுரங்கபாலம் கட்டும் பணி, 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் (2010-11) துவங்கிய பணி, வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாலம் பணி நிறைவுறும் போது, குமரன் ரோட்டின் வாகன போக்குவரத்து தடையின்றி இருக்கும்,' என்றனர்.