/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராமேஸ்வரத்துக்கு ரயில் செல்லும் நேரம் மாற்றம்
/
ராமேஸ்வரத்துக்கு ரயில் செல்லும் நேரம் மாற்றம்
ADDED : ஏப் 05, 2025 12:14 AM
திருப்பூர்; பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி காரணமாக நான்கு ஆண்டுகளாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு செவ்வாய் தோறும் இயக்கப்படும் வாராந்திர ரயில் (எண்:16618) ராமநாதபுரத்துடன் திரும்பியது. புதிய பாம்பன் ரயில் பாலம் பணி முடிந்து, நாளை (6ம் தேதி) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், ராமேஸ்வரத்துக்கு புதன்தோறும் அதிகாலை 5:45 மணிக்கு செல்லும் கோவை ரயில், வரும், 9ம் தேதி முதல், காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து புறப்படும் ரயில் ராமேஸ்வரம் செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், பாம்பன் பாலம் திறப்புக்கு பின், கோவை ரயில் ராமேஸ்வரத்துக்கு, 9ம் தேதி செல்வது உறுதியாகியுள்ளது. மறுமார்க்கமாக ராமநாதபுரத்துக்கு பதிலாக, ராமேஸ்வரத்தில் இருந்து இரவு, 7:30 மணிக்கு கோவைக்கு ரயில் புறப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

