/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறன்மிகு தொழிலாளராக மாற தொழில்முனைவோராக பயிற்சி
/
திறன்மிகு தொழிலாளராக மாற தொழில்முனைவோராக பயிற்சி
ADDED : பிப் 10, 2025 07:06 AM
திருப்பூர்:  நிப்ட்-டீ கல்லுாரியில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பகுதி நேர பயிற்சி வகுப்புகளுக்கான அட்மிஷன் நடைபெற்றுவருகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில், பகுதி நேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்பு செயல்படுத்தப்பட்டுவருகிறது. அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங், மேனுவல் மற்றும் கேட் மென்பொருள், ஓவர்லாக், பிளாட் லாக், பவர் சிங்கர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டுக்கான அப்பேரல் மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்பு தற்போது துவங்கியுள்ளது. கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், முதன்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், பயிற்சியில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கினர்.
பகுதி நேர பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:
பின்னலாடை வர்த்தகத்தில் நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. செலவினங்களை கட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிப்பது; முதல்முறையே நேர்த்தியாக ஆடை தயாரிப்பது அவசியமாகிறது. திறன் மிகு தொழிலாளர் களாலேயே இதனை சாத்தியமாக்க முடியும்.
நிப்ட்-டீ கல்லுாரியின் பகுதி நேர பயிற்சி மையத்தில், குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும் இந்த பயிற்சிகள் மூலம், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  திறனை வளர்த்துக்கொண்டு,  அடுத்த நிலைக்கு நகரலாம்; தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.
புதிய தொழில்முனைவோர் ஆடை உற்பத்தி பயிற்சி பெறுவதன்மூலம், தொழில் சார்ந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, நிறுவனங்களை திறம்பட வழிநடத்திச் செல்லமுடியும். அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல் அன்ட் பேட்டர்ன் மேக்கிங், கம்ப்யூட்டர் கேட் மற்றும் ஓவர்லாக், பிளாட் லாக், சிங்கர் டெய்லர், பேஷன் டிசைன் வகுப்புகளுக்கான அட்மிஷன் நடைபெற்றுவருகிறது. விருப்பமுள்ளோர், 95979 14182 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

