/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி; மாவட்டத்தில் 250 பேர் பங்கேற்பு
/
இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி; மாவட்டத்தில் 250 பேர் பங்கேற்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி; மாவட்டத்தில் 250 பேர் பங்கேற்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி; மாவட்டத்தில் 250 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 05, 2025 11:41 PM
-- நமது நிருபர் -
புதிதாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் - கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சி, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.
கல்வித்துறை சார்பில், புதிதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர்மாவட்டத்தில், நொய்யல் வீதி மற்றும் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பல்லடம், வட்டார வள மையம், தாராபுரம் மகாராணி கல்லுாரி ஆகிய மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் துவங்கிய பயிற்சியை, சி.இ.ஓ., காளிமுத்து, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் இளங்கோவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கருத்தாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
பல்லடம் வட்டார வள மையத்தில் நடைபெறும் பயிற்சியை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தலைமையேற்று நடத்தினார்.
திருமூர்த்தி நகர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் முஸ்ரக் பேகம், விசுவநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஐந்து நாள் நடை பெறும் பயிற்சியில் கற்றல் - கற்பித்தல் உத்திகள், எண்ணும் எழுத்தும், செயல் ஆராய்ச்சி, பதிவேடுகள் பராமரிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, வினா கேட்டல் திறன், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கற்பித்தல் முறைகள் கற்றுத்தரப்பட உள்ளன.
பயிற்சியில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 250 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.