/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி
/
சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி
சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி
சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி
ADDED : ஜன 31, 2024 12:15 AM
உடுமலை:சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு, உடற்தகுதி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம், கிரேடு - 3 பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றோருக்கு, அடுத்த கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள், இந்த உடற்தகுதி தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயரை மையத்தை நேரிலோ, 0421 299 9152, 94990 55944 எண்களில் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.