ADDED : அக் 03, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த பவன்குமாரை, அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இடமாற்றம் செய்யப்பட்ட கமிஷனர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.