ADDED : டிச 23, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு மாதமாகியும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''விடை கிடைக்காத இச்சம்பவம், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. விரைவாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு, காவல்துறை தாமாக முன்வந்து, வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

