/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பாதுகாப்பு இல்லை! குறிவைத்து திருடும் கும்பல்
/
'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பாதுகாப்பு இல்லை! குறிவைத்து திருடும் கும்பல்
'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பாதுகாப்பு இல்லை! குறிவைத்து திருடும் கும்பல்
'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பாதுகாப்பு இல்லை! குறிவைத்து திருடும் கும்பல்
ADDED : ஜூலை 28, 2025 09:21 PM

உடுமலை; உடுமலை அருகே, டிரான்ஸ்பார்மர் உதிரிபாகங்களை குறி வைத்து திருடும் கும்பல், தொடர் கைவரிசை காட்டி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை மின்பகிர்மான வட்டம், கொங்கல்நகரம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகள் புதுப்பாளையம், அடிவள்ளி, வல்லக்குண்டாபுரம், கொங்கல்நகரம் உள்ளிட்ட கிராமங்கள்.
அப்பகுதியில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. பல ஆயிரக்கணக்கான விவசாய மின் இணைப்புகளுக்காக, ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் அடிவள்ளி கிராமம் அருகே, விளைநிலத்தில் இருந்த, டிரான்ஸ்பார்மரில், காயில் உள்ளிட்ட உதிரிபாகங்களையும், ஆயிலையும் மர்மகும்பல் திருடிச்சென்றது. விவசாயிகள் மற்றும் மின்வாரியம் சார்பில், குடிமங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு சில நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், வல்லக்குண்டாபுரம் செல்லும் வழித்தடத்தில், டிரான்ஸ்பார்மர் எண், 16ல், உபகரணங்களை நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் திருடிச்சென்றுள்ளது.
தொடர்ச்சியாக டிரான்ஸ்பார்மர்களை குறிவைத்து கும்பல் திருடி வருவது, அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், டிரான்ஸ்பார்மர்கள் இருப்பதால், இரவு நேரங்களில், மர்ம கும்பல், உதிரிபாகங்களை எளிதாக திருடிச்செல்கின்றனர்.
அரசுக்குச்சொந்தமான டிரான்ஸ்பார்மர்களில் தொடர் திருட்டு நடந்தும், குடிமங்கலம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இதே நிலை நீடித்தால், மின்மோட்டார், மோட்டார் கேபிள் வரிசையில், டிரான்ஸ்பார்மர்களையும் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.