/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வலசை பறவைகள் 'வந்த பாதை நோக்கி' பயணம்
/
திருப்பூரில் வலசை பறவைகள் 'வந்த பாதை நோக்கி' பயணம்
திருப்பூரில் வலசை பறவைகள் 'வந்த பாதை நோக்கி' பயணம்
திருப்பூரில் வலசை பறவைகள் 'வந்த பாதை நோக்கி' பயணம்
ADDED : மார் 22, 2026 05:35 AM

திருப்பூர்: திருப்பூர் நகரின் மையப்பகுதியில், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், மாணிக்காபுரம் குளம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு, பல்வேறு உள்நாட்டு பறவைகள் உள்ள நிலையில், ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் குளிர்கால புகலிடமாகவும் விளங்குகின்றன.
ஆண்டுதோறும், குளிர்காலம் துவங்கும், அக்., மாதத்தில், 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் திருப்பூருக்கு வந்து செல்வது வழக்கம். பட்டைத்தலை வாத்து, செந்தலை வாத்து உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், இமயமலை அடிவாரம் மற்றும் தெற்கு ஆசியாவை தாயகமாக கொண்ட நீலவால் பஞ்சுருட்டான் உட்பட பல்வேறு பறவைகள், சில மாதங்களாக திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் மாணிக்காபுரம் குளத்தில் இருந்தன.
கோடை துவங்கியுள்ள நிலையில், வலசை வந்த பறவைகள், மீண்டும் திரும்ப துவங்கியுள்ளன.

