ADDED : அக் 30, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் உட்கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் வாயிலாக, 3,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதற்கான பணி, நேற்று திருப்பூர் - விஜயமங்கலம் சாலையில் துவங்கியது.
திருப்பூர் கோட்ட பொறியாளர் ரத்தினசாமி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பணி துவங்கியது. 'சாலையோரம் மற்றும் மரக்கன்று நட்டு வளர்க்க வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

