
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரேம தரு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாறாவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாய் பக்தர்கள், சேவா அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், பல்லடம், அனுப்பட்டியில், 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இயற்கை அன்னைக்கு சேவை செய்யும் வகையில் இந்நிகழ்வில் சாய் பக்தர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.பகவான் சத்ய சாய்பாபா நுாற்றாண்டை முன்னிட்டு நடப்பட்ட இந்த மரக்கன்றுகளை சாய் பக்தர்கள் சார்பில் பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

