ADDED : ஆக 04, 2025 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரி பாளையத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
அங்கு ஊராட்சி சார்பில் மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்குள்ள புதர்களை அகற்றி உள்ளனர். அவற்றை வெளியே கொண்டு வந்து கொட்டாமல் சுத்தம் செய்வதற்காக தீ வைத்ததாக தெரிகிறது. தீ மளமளவென பரவி ஊராட்சியால் நட்டு வைத்திருந்த மரங்களுக்கும் பரவியது. இதில் பல மரங்கள் தீயில் எரிந்து கருகின. கவனக் குறைவால் பல ஆண்டு உழைப்பு வீணாகியது.