/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீரமைப்பு பணியுடன் சீரழிக்கப்பட்ட மரங்கள்
/
சீரமைப்பு பணியுடன் சீரழிக்கப்பட்ட மரங்கள்
ADDED : ஜூலை 22, 2025 12:19 AM

பல்லடம்; பல்லடம் அடுத்துள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.
இச்சீரமைப்பு பணியின் போது சாலையோரத்தில் இருந்த முட்செடிகள், புதர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வந்தன. இதனுடன், ரோட்டோரத்தில் இருந்த வேம்பு, கருவேல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் பெயர்த்து வீசப்பட்டுள்ளன.
பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:
சீரமைப்பு பணி மேற்கொள்வதானால், ரோட்டில் நீட்டிக்கொண்டிருக்கும் கிளைகளை மட்டுமாவது அகற்றி இருக்கலாம். ஆனால், எந்தவித பாரபட்சமும் பார்க்காமல், நீண்ட நாட்களாக உள்ள பசுமையான மரங்களை வேருடன் வெட்டி அகற்றி உள்ளனர். தன்னார்வலர்கள் பலர், தங்களது சுய முயற்சியால், நுாற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சாலையோர பூங்கா அமைத்துள்ளனர்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறையினர், மரங்களை வேருடன் அகற்றி பசுமைக்கு வேட்டு வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

