ADDED : அக் 13, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோட்டில் பெய்த மழைக்கு, இரு மரங்கள் சாய்ந்து விழுந்தன.
திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சீதோஷ்ணம் குளிர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையில், காலேஜ் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட் அருகே, பழமையான, இரண்டு மரங்கள் சாய்ந்து விழுந்தன. நேற்று காலை, மாநகராட்சியினர் சாய்ந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
மழை காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி, வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.