ADDED : ஆக 04, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, அவரது பிறந்த ஊரான மேலப்பாளையத்தில், தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, மேலப்பாளையம் சமுதாய நலக்கூடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், நினைவுநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அமைச்சர் கயல்விழி, கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆகியோர், அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினர். தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் சார்பில் தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.