ADDED : ஏப் 26, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஷ்மீர் - பஹல்காம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு, பல்லடம் நகர காங்., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கனகராஜ், ராமச்சந்திரன், உத்திரமூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னதாக, தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக, அவர்களது படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.