/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு
/
கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு
கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு
கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு
ADDED : ஜன 28, 2025 05:16 AM
திருப்பூர்: ஏற்றுமதி நிறுவனம் அளிக்கும் கடிதத்துடன், இறக்குமதி சரக்கு வரும் கன்டெய்னர் லாரிகளில், துறைமுகத்துக்கு சரக்கு அனுப்பி வைக்கும் முறைகேடு நடப்பதாக, திருப்பூரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், கன்டெய்னர் லாரிகள் மூலம், துாத்துக்குடி துறைமுகம் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு, சுங்கவரித்துறை சரிபார்த்த பிறகு, மற்றொரு கன்டெய்னர் வாயிலாக, சரக்கு கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. கன்டெய்னர் லாரிகள் திருப்பூரில் இருந்து துறைமுகங்களுக்கு இயக்கப்படுகிறது. சுங்கவரித்துறை விதிமுறைகளின்படி, இறக்குமதி சரக்கை எடுத்துவரும் கன்டெய்னரில், திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடாது.
இறக்குமதி சரக்கை ஏற்றிவரும் லாரிகள், சரக்கை இறக்கிவிட்டு, மீண்டும் காலியான கன்டெய்னர்களுடன் தான் செல்ல வேண்டும்; அதற்கும் சேர்த்துதான், கட்டணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் ஒரு சில ஏற்றுமதியாளர்கள் இணைந்து, முறைகேடாக சரக்குகளை இதுபோன்ற கன்டெய்னர்களில் துறைமுகம் அனுப்பி வைக்கின்றனர்.
திருப்பூரில் அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் லாரி தொழில், இதனால் பாதிக்கப்படுவதாக ஆட்சேபனை எழுந்தது. கன்டெய்னர் லாரி உரிமையாளர்களின் தொடர்ச்சியான நடவடிக்கையால், சுங்கத்துறை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 'இறக்குமதி சரக்கை கொண்டு வரும் லாரிகள், திரும்பி செல்லும் போது ஏற்றுமதிக்கான பார்சல்களை ஏற்றிச்செல்லக்கூடாது' என்ற திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் உத்தரவை காற்றில் விடுவது போல், மீண்டும் அத்தகைய முறைகேடாக சரக்கு போக்குவரத்து தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, இத்தகைய முறைகேடு தைரியமாக நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.