/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் பைக்கை ஓட்டிச்செல்ல முயற்சி
/
போலீஸ் பைக்கை ஓட்டிச்செல்ல முயற்சி
ADDED : ஜூலை 09, 2025 10:56 PM
பல்லடம்; நேற்று முன் தினம் இரவு, வட மாநில இளைஞர் ஒருவர், சமூக விரோதிகள் சிலரிடம் பணத்தை இழந்தார்.
நேற்று காலை இது குறித்து புகார் அளிக்க வேண்டி பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். இளைஞர், தான் கொண்டு வந்த டூவீலரை, நேற்று முன்தினமே, பஸ் ஸ்டாண்டிலேயே விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில், நேற்று காலை, மது போதையில் வந்த அந்த இளைஞர், தனது பைக் சாவியை பயன்படுத்தி, ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஒருவரின் பைக்கை, தனது பைக் என்று நினைத்து எடுத்துச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்த போலீசார், இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, போலீசின் பைக்கையே எடுத்துச் செல்ல முயன்ற இளைஞரால், பல்லடம் ஸ்டேஷனில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.