/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்
/
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்
ADDED : ஜன 12, 2025 02:20 AM
திருப்பூர்: திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், தென்னிந்திய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025, கிரிக்கெட் போட்டி இன்று (12ம் தேதி) முதல் வரும், 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
திருப்பூர், முருகம்பாளையம், வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இன்று காலை 7:30 மணிக்கு துவக்க விழா, நடக்கிறது. திருப்பூர்எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் போட்டிகளை துவக்கி வைக்கின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம், 30 ஓவர்களை கொண்டதாக போட்டி நடக்கிறது.
இன்று துவங்கி, வரும், 17ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. வரும், 18 முதல் விறுவிறுப்பான அரையிறுதி போட்டியும், வரும், 19ம் தேதி கோப்பை கைப்பற்றுவோருக்கான இறுதி போட்டியும் நடக்கிறது.
தினமும் காலை, 7:15 மணிக்கு முதல் போட்டியும், மதியம், ஒரு மணிக்கு இரண்டாவது போட்டியும் நடக்கும். இன்றைய முதல் போட்டியில் தொடரை நடத்தும் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியும், ஆர்.எஸ்.ஜி.,எஸ்.ஜி., கிரிக்கெட் ஸ்கூல் கேரளா அணியும் முதல் போட்டியில் மோதுகிறது.
மதியம் நடக்கும் போட்டியில், திரிபணித்துரா கிரிக்கெட் அகாடமி - சென்னை டான் போஸ்கோ அணியை எதிர்கொள்கிறது. போட்டி யில் வெற்றி பெறும் அணிக்கு, டி.எஸ்.சி., கோப்பை வழங்கப்படும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்.

