/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று அரையிறுதி ஆட்டம்
/
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று அரையிறுதி ஆட்டம்
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று அரையிறுதி ஆட்டம்
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று அரையிறுதி ஆட்டம்
ADDED : ஜன 18, 2025 12:24 AM

திருப்பூர், ; திருப்பூரில் நடந்து வரும் டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட்டில், அரையிறுதிக்கு, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட், கோவா, ஸ்பார்க்ளிங் ஸ்டார்ஸ், ஐதராபாத் கோச்சிங் பியாண்ட், கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அகில இந்திய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025, கிரிக்கெட் போட்டியை திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' நடத்துகிறது. கடந்த, 12ம் தேதி முதல் தினமும் இரு லீக் போட்டிகள் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவுக்கான லீக் போட்டி, 14ம் தேதி நிறைவுற்றது. இப்பிரிவில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற போட்டியை நடத்தும் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.
'பி' பிரிவுக்கான லீக் போட்டி, 15ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில், ஆந்திராவில் அனந்தபூர் அணி - ஐதராபாத் கோச்சிங் பியாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
அனந்தபூர் அணி, 23.4 ஓவர்கள் விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 95 ரன் மட்டும் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய கோச்சிங் பியாண்ட் அணி, 15.4 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 96 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 4.4 ஓவர் வீசி, 25 ரன் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி கோச்சிங் பியாண்ட் அணி பவுலர், ஸ்மரன் துஷார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியில், கர்நாடகா கே.பி.என்.சி.ஏ., அணி - கோவா, ஸ்பார்க்ளிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பேட்டிங் செய்தது; 29.3 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 123 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய கோவா அணி, 26.1 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை (124 ரன்) எட்டியது. 37 பந்துகளில், 37 ரன் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோவா அணி பேட்ஸ்மேன் தீப்ராஜ் நாயக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று அரையிறுதி
இன்று திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் - கோவா, ஸ்பார்க்ளிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதி போட்டியும், ஐதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி - கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணி இடையே இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடக்கிறது; வெற்றி பெறும் அணிகள், கோப்பைக்கான இறுதி போட்டியில் மோதும். தோற்கும் அணிகளுக்கு, மூன்றாடமிடத்துக்கான போட்டியில் பங்கேற்கும்.
இன்று நடக்கும் அரையிறுதி மற்றும் நாளை (19ம் தேதி) நடக்கும் இறுதி போட்டியை காண, பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என ஸ்கூல் ஆப் கிரிக்கெட் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.