/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.எஸ்.சி., அணி 'ஹாட்ரிக்' வெற்றி! அரையிறுதி போட்டியில் நுழைந்தது
/
டி.எஸ்.சி., அணி 'ஹாட்ரிக்' வெற்றி! அரையிறுதி போட்டியில் நுழைந்தது
டி.எஸ்.சி., அணி 'ஹாட்ரிக்' வெற்றி! அரையிறுதி போட்டியில் நுழைந்தது
டி.எஸ்.சி., அணி 'ஹாட்ரிக்' வெற்றி! அரையிறுதி போட்டியில் நுழைந்தது
ADDED : ஜன 16, 2025 05:31 AM

திருப்பூர், : திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், அகில இந்திய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025, கிரிக்கெட் போட்டி திருப்பூரில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை நடந்த போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் மற்றும் சென்னை டான்பாஸ்கோ அணியும் மோதின. இதில், திருப்பூர் அணி 30 ஓவரில், 183 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய, டான் பாஸ்கோ அணி, 25.4 ஓவரில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 119 ரன் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
* மாலை நடந்த, 2வது போட்டியில் கேரளா ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., மற்றும் திரிபணித்துரா கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த, ஆர்.எஸ்.சி., அணி, 6 விக்கெட் இழப்புக்கு, 197 ரன் எடுத்தது. அடுத்து பேட் செய்த திருபணித்துரா அணி, 27.4 ஓவரில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 110 ரன்களுக்கு சுருண்டது.
நேற்று காலை போட்டியில், கர்நாடகா கே.பி.என்.சி.ஏ., - ஆந்திரா அனந்தபூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 30 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 155 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய, அனந்தபூர் அணி, 28.5 ஓவரில், வெற்றிக்கு தேவைப்படும் 156 ரன் குவித்து வெற்றி பெற்றது. ஆறு பவுண்டரிகள் விளாசிய, 43 பந்துகளில், 45 ரன் எடுத்த அனந்தபூர் பேட்ஸ்மேன் சஞ்சய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியில் ைஹதாராபாத் கோச்சிங் பியாண்ட் அணி, கோவா ஸ்பார்கில்லிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகள் மோதின. ைஹதாராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ததில், 25.2 ஓவரில், 167 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய, கோவா அணி, 30 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 127 ரன் மட்டும் எடுத்து, 40 ரன் வித்தியாசத்தில் தோற்றது. பேட்டிங்கில் அசத்திய, நமன் சவுத்ரி, ஆறு ஓவர் வீசி, 14 ரன் மட்டும் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நேற்று, குரூப் பி லீக் போட்டிகள் துவங்கியது. முன்னதாக, குரூப் 'ஏ' பிரிவுக்கான லீக் போட்டிகள் முடிந்த நிலையில், ஹாட்ரிக் வெற்றி பெற்று, ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறியது.

