/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காச நோய் பரிசோதனை வாகனம்: கலெக்டர் ஆய்வு
/
காச நோய் பரிசோதனை வாகனம்: கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 11, 2024 05:06 AM
திருப்பூர்; நடமாடும் காச நோய் பரிசோதனை வாகன இயக்கம் மற்றும் முகாமை, கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் காசநோய் பரிசோதனை வாகன இயக்கம், கடந்த, 7ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த வாகனம், கிராமம் கிராமமாக சென்று, மக்கள் மத்தியில் காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது; காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி, 53வது வார்டு, குப்பாண்டம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற காச நோய் மருத்துவ முகாமை, கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ''பரிசோதனையின்போது காச நோய் கண்டறியப்படுவோர், உடனடியாக உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர். தமிழக அரசு மேற்கொண்டுவரும் காச நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்,'' என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

