/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கயிறு இழுக்கும் போட்டி ஆசிரியர், மாணவர் ஆர்வம்
/
கயிறு இழுக்கும் போட்டி ஆசிரியர், மாணவர் ஆர்வம்
ADDED : டிச 11, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் அடுத்த கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப் பள்ளியில், 2025 - -26ம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார் தலைமை வகித்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் - ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

