ADDED : மே 31, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 35; இவரது டூவீலரை கடந்த மூன்று நாட்கள் முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். நேற்று கோவை சின்னியம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் டூவீலரில் வந்த சந்தேகப்படும்படியான இருவரை பிடித்து விசாரித்தனர்.
பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த சிவா, 32, மதன் என்கிற விக்னேஷ், 40 என்பதும், டூவீலர் திருடியதும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.