ADDED : மே 26, 2025 06:34 AM
பைக் திருடிய பலே ஆசாமிகள் சிக்கினர்
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கிராண்ட் விஸ்டா பகுதியை சேர்ந்தவர் அருண் குமார், 25, வங்கி ஊழியர். கடந்த 22ம் தேதி தனது வீட்டு முன் நிறுத்தி இருந்த விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி சக்திவேல், 22, சேலம் மாவட்டம், ஓமலுார் குணா, 19, ஆகிய இருவரை கைது செய்தனர். இருவர் மீது பல்வேறு பைக் திருட்டு வழக்குகள் உள்ளது. அவர்களிடமிருந்து நான்கு பைக்கை பறிமுதல் செய்தனர்.
சூதாட்ட கும்பல் பிடிபட்டது
காங்கயம் - சென்னிமலை ரோட்டில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு காங்கயம் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு இல்லியம்புதுாரைச் சேர்ந்த சிவகுமார், 47; குப்பியண்ணன், 40; கனியாளன், 55; ராம்குமார், 45, மற்றும் நடராஜ், 51 ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் ஒருவர் கைது
காங்கயம் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 25. இவரது வீட்டில் ஹோம் தியேட்டர் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய, வீரபாண்டியைச் சேர்ந்த பிரவீன், 24 என்பவரை காங்கயம் போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின் அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.