/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு மோட்டாரை சரி செய்ய ரெண்டு மாதமா? ஊராட்சி தலைவியிடம் பெண்கள் சரமாரி கேள்வி
/
ஒரு மோட்டாரை சரி செய்ய ரெண்டு மாதமா? ஊராட்சி தலைவியிடம் பெண்கள் சரமாரி கேள்வி
ஒரு மோட்டாரை சரி செய்ய ரெண்டு மாதமா? ஊராட்சி தலைவியிடம் பெண்கள் சரமாரி கேள்வி
ஒரு மோட்டாரை சரி செய்ய ரெண்டு மாதமா? ஊராட்சி தலைவியிடம் பெண்கள் சரமாரி கேள்வி
ADDED : ஜன 19, 2024 04:35 AM

பல்லடம் : ஒரு மோட்டாரை சரி செய்ய இரண்டு மாதமா என, பல்லடம் அருகே, குடிநீருக்காக, காளி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கேள்வி எழுப்பினர்.
பல்லடம் ஒன்றியம், பூமலுார் ஊராட்சி, பள்ளபாளையம் கிராமத்தில், குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்து அப்பகுதிக்கு சென்ற ஊராட்சி தலைவர் பிரியங்கா மற்றும் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர், 'உங்களுக்கு இதுபோல் குடிநீர் வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? ஒரு மோட்டாரை சரி செய்ய இரண்டு மாதமா?,' என, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
'ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, ஒரு நாளில் தரைமட்ட தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று ஊராட்சித் தலைவர் உறதியளித்தார். 'நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம்,' என்று கூறி, பெண்கள் கலைந்து சென்றனர்.
பாரபட்சம் காட்டுவது ஏன்?
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:
கடந்த காலங்களில், இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. சமீப நாட்களாக, குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. அருகிலுள்ள நடுப்பாளையம் கிராமத்துக்கு, பள்ளபாளையம் வழியாக குடிநீர் செல்கிறது. அங்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில், எங்கள் பகுதிக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது. மோட்டார் பழுதானதாக கூறி இரண்டு மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. இன்றுவரை இதே காரணத்தை கூறி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

