/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாய கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
/
சாய கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
சாய கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
சாய கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
ADDED : மே 20, 2025 04:26 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், கரைப்புதுாரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தில் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், நேற்று மாலை நான்கு பேர் ஈடுபட்டனர்.
அப்போது, விஷவாயு தாக்கியதில், அவர்கள் திடீரென மயக்கமடைந்தனர். தொடர்ந்து, அவர்களை மீட்டு திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதனையில், சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், 31, வேணுகோபால், 30, ஆகியோர் இறந்தது தெரிந்தது. ஹரி, 26, சின்னசாமி, 36, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் சம்பந்தப்பட்ட சாய ஆலையில் ஆய்வு செய்தனர். சாய ஆலை உரிமையாளர் நவீனிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.