/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டூ வீலர்'கள் நிறுத்தம்; கோவில் முன் நெரிசல்
/
'டூ வீலர்'கள் நிறுத்தம்; கோவில் முன் நெரிசல்
ADDED : ஏப் 05, 2025 05:50 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கே.எஸ்.சி., பள்ளி வீதி, பெரியகடை வீதி வழியாக வரும் வாகனங்கள், நொய்யலை கடந்து, யூனியன் மில்ரோடு வழியாக செல்ல, ஈஸ்வரன் கோவில் வீதியை பயன்படுத்துகின்றன.
நான்கு சக்கர வாகனங்களும் அதிகம் இவ்வழியாக வந்து செல்வதால், போக்குவரத்து பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், கோவில் முன்பு 'டூ வீலர்'கள் அதிக அளவு நிறுத்துவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில்,'கோவில் முன்பு, 'டூவீலர்'களை நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக, பட்டி விநாயகர் கோவில் மற்றும் கோவிலின் தோரண வாயில் முன்பாக, அதிக வாகனம் நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே, கோவிலின் முன், இரும்பு தடுப்புகளை வைத்து, ஆக்கிரமித்துள்ளனர்; அதற்கு வெளியே 'டூவீலர்' நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கிறது.
பிரதோஷ நாட்களில் அதிக, வாகன நெரிசல் ஏற்படுகிறது. கோவிலில் ராஜகோபுரம் முன்பு, வாகனம் நிறுத்துவதை, தெற்கு போலீசார் முறைப்படுத்த வேண்டும்,' என்றனர்.

