/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியில்லாத சந்தை; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்
/
அனுமதியில்லாத சந்தை; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்
அனுமதியில்லாத சந்தை; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்
அனுமதியில்லாத சந்தை; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 31, 2025 11:35 PM
உடுமலை; உடுமலை அருகே, அனுமதியில்லாமல், மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், நடத்தப்படும் வாரச்சந்தையால், விபத்து அபாயம் அதிகரித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, உடுமலை-ராமச்சந்திராபுரம் ரோடு இணையும், நால்ரோடு சந்திப்பு கொங்கல்நகரத்தில், அமைந்துள்ளது.
சந்திப்பு பகுதி, மேம்படுத்தப்படாத நிலையில், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகளவு இருக்கும். பொள்ளாச்சி, தாராபுரம், நெகமம், உடுமலை உட்பட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், நால்ரோடு பகுதியில், நின்று பயணியரை ஏற்றி செல்கின்றன.
இவ்வாறு, நெரிசல் மிகுந்த பகுதியில், மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, வாரச்சந்தை நடத்தப்படுகிறது.
வியாழக்கிழமைதோறும், ரோட்டை ஒட்டி, தற்காலிகமாக, 20க்கும் அதிகமான கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தை ஒட்டி, இக்கடைகள் அமைக்கப்படுவதால், அதிக நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பொருட்களை வாங்க வருபவர்கள், ரோட்டை ஒட்டி, தாறுமாறாக வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால், மாநில நெடுஞ்சாலையில், நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
மாநில நெடுஞ்சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களால், விபத்து அபாயமும் உள்ளது. சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில், விபத்து ஏற்பட்ட பிறகு, நெடுஞ்சாலைத்துறையினர் நால்ரோடு பகுதியில், வேகத்தடை அமைத்தனர்.
இருப்பினும், வாரச்சந்தையால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு, மாநில நெடுஞ்சாலைகளில், செயல்படும் வாரச்சந்தைகளுக்கு எவ்வித அனுமதியும் பெறப்படுவதில்லை.
எனவே, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து, அனுமதியில்லாமல், செயல்படும் வாரச்சந்தைக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியுள்ளனர்.