/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூடப்படாத கால்வாய்; பாதசாரிகளுக்கு ஆபத்து
/
மூடப்படாத கால்வாய்; பாதசாரிகளுக்கு ஆபத்து
ADDED : ஜூலை 14, 2025 12:58 AM

பல்லடம்; பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய தாட்கோ கடைகள் இடித்த அகற்றப்பட்டு, நகராட்சி டூவீலர் பார்க்கிங் வசதி மற்றும் நடைமேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
இந்த நடைமேடையை, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பாதசாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடைமேடை வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, நடைமேடையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதனையடுத்து, கழிவு நீர் கால்வாய் சரியாக மூடப்படாமல், நடைமேடையும் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.
கழிவு நீர் கால்வாயை கடந்து செல்ல சிறிய சிமென்ட் சிலாப் மட்டும் போடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியாமல், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து, நடைமேடையை சீரமைக்க வேண்டும்.