/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதாள சாக்கடை உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
/
பாதாள சாக்கடை உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
பாதாள சாக்கடை உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
பாதாள சாக்கடை உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
ADDED : ஜூலை 18, 2025 11:41 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 38 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப். மங்கலம் ரோட்டில் அமைந்துள்ள இந்த பகுதியில் போயர் காலனி குடியிருப்பு ரோட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், நடுநிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன.
மங்கலம் ரோட்டில் மையப் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பிரதான குழாய் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதி கட்டடங்களில் சேகரமாகும் கழிவு நீர் இந்த குழாய் வழியாக, சின்னாண்டிபாளையம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு செல்கிறது.
இந்த குழாயில் மங்கலம் ரோட்டில் போயர் காலனி முன்புறம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இக்குழாய் வழியாகச் செல்லும் கழிவு நீர் பொங்கிப் பெருகி ரோட்டில் சென்று பாய்கிறது.
தாழ்வான பகுதியாக உள்ளதால், போயர் காலனியில் ரோட்டோரம் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. மேலும், பள்ளிக்கூடம் ெசல்லும் ரோட்டில் முழுமையாக ரோட்டை மறித்து கழிவு நீர் பாய்கிறது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கழிவு நீருக்குள் இறங்கி கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தாழ்வாக உள்ள வீடுகளிலும் கழிவுநீர் புகுந்து விடுவதால் பெரும் அவதி நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
இந்த இடத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பொங்கி வெளியேறுவது அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் ஒரு வீதியில் மட்டுமே கழிவு நீர் வடிகால் உள்ளது.
அதுவும் நீண்ட காலம் முன்னர் கட்டியது. முழுமையாக கழிவு நீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். இப்பிரச்னை குறித்து கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இது வரை நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.