/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 22, 2025 08:07 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, மாதம்தோறும் மாநில அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி உள்ளிட்ட பிரிவுகளில் உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை.
தமிழகத்தில் பள்ளி அல்லது கல்லுாரி படிப்பை முடித்து, 15 ஆண்டுகள் இங்கே வசித்தவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள், தனியாரிடமிருந்து ஊதியமோ அல்லது அரசிடமிருந்து வேறு எந்தவிதமான உதவித்தொகையும் பெறக்கூடாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

