/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரமற்ற உணவு; பெற்றோர் முற்றுகை
/
சுகாதாரமற்ற உணவு; பெற்றோர் முற்றுகை
ADDED : ஜன 23, 2025 12:26 AM
திருப்பூர்; குண்டடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகா தாரமற்ற உணவு வழங்கப்பட்டதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
குண்டடம், நந்தவனம்பாளையம், வடவேடம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவ, மாணவியருக்கு மதியம் வழங்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக உள்ளதாக புகார் எழுந்தது.
பருப்பு வகைகளில், சுத்தம் செய்யாமல் அப்படியே சுகாதாரமற்ற வகையில் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுப்பதாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டினர்.
நேற்று மதியம் பள்ளியை, 30க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர், சத்துணவு பொறுப்பாளர் ராதாமணி ஆகியோரிடம் தங்கள் புகாரை தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற, வட்டார கல்வி அலுவலர், குண்டடம் போலீசார் பேச்சு நடத்தினர். பின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிமுத்து பள்ளியில் விசாரணை செய்தார்.
சம்பந்தப்பட்ட மளிகை பொருட்களை உடனடியாக மாற்ற சொல்லியும், புகார் பெட்டி ஒன்றை பள்ளியில் வைப்பதாகவும் தெரிவித்தார். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

