/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரச மரத்தடியில் அஷ்ட நாகர்கள் கோவிலில் தனிச்சிறப்பு
/
அரச மரத்தடியில் அஷ்ட நாகர்கள் கோவிலில் தனிச்சிறப்பு
அரச மரத்தடியில் அஷ்ட நாகர்கள் கோவிலில் தனிச்சிறப்பு
அரச மரத்தடியில் அஷ்ட நாகர்கள் கோவிலில் தனிச்சிறப்பு
ADDED : ஏப் 16, 2025 11:49 PM
உடுமலை; நீர் வளம் மிகுந்த உடுமலை பகுதியில், காக்கும் தெய்வமாய் அருள்பாலிக்கும் மாரியம்மன் கோவிலில், அஷ்டநாகர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி, பாலாறு, உப்பாறு என நீர் வளம் மிகுந்த ஆறுகள் சூழ்ந்த பகுதியில் உடுமலை அமைந்துள்ளது. வெள்ளிமலை, ஆனைமலை, திருமூர்த்திமலையை அரணாக பெற்றது இப்பகுதி.
பல நுாற்றாண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களால் கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு தளி பாளையக்காரர்கள், பூஜை காரியங்களுக்காக நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
கிழக்கு முகமாக அமைந்த மாரியம்மனுக்கு குடையாக படர்ந்து அடர்ந்து தனித்து நிற்கிறது அரசமரம். இம்மரம், ஆண்டுதோறும், தேர்த்திருவிழாவின் போது, பசுமைக்கு மாறி, பக்தர்களை வரவேற்பது சிறப்பம்சமாகும்.
இந்த பழமையான அரச மரத்தின் கீழ், கோவில் வடக்கு வாயிலையொட்டி, அஷ்டநாகர்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நாகரை சுற்றி வந்து வழிபாடு செய்வதால், பல்வேறு நன்மைகள் பக்தர்களுக்கு கிடைக்கிறது.
திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் ஸ்ரீ அனந்தன் முதலான அஷ்டநாகர்களுக்கு பாலாபிேஷகம் செய்து பலன்களை பெறுகிறார்கள்.
நாகதேவதைகளின் அரசனாக கருதப்படுபவர் ஸ்ரீ அனந்தன். பூமியின் சுழற்சி மையம் என்பதால், இவரை பாலாபிேஷகம் செய்து குளிர்வித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரத்தன்று ஸ்ரீ அனந்தன் உள்ளிட்ட எட்டு நாகராஜாக்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
நாகசதுர்த்தி, நாகபஞ்சமி முதலிய விசேஷ நாட்களில் அஷ்ட நாகருக்கு பாலாபிேஷகம், தேனாபிேஷகம் முதலிய பலவிதமான அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகிறது.
நாக பூஜையானது தொன்று தொட்டு பன்னெடுங்காலமாக பாரத பூமியெங்கும் பரவலாக பயபக்தியுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நாக பூஜை, உடுமலை மாரியம்மன் கோவிலிலும், தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.