/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளைய நேர்மையை வடிவமைக்க ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்
/
நாளைய நேர்மையை வடிவமைக்க ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்
நாளைய நேர்மையை வடிவமைக்க ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்
நாளைய நேர்மையை வடிவமைக்க ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்
ADDED : டிச 11, 2025 04:48 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தையொட்டி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் அன்புசெல்வி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி மாணவி ராகவி, சார்பு நீதிபதி சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
'நாளைய நேர்மையை வடிவமைக்க இளைய தலைமுறையை ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுத்துதல்' என்ற, 2025 ம் ஆண்டின் கருப்பொருள் குறித்தும், ஊழல் எவ்வாறு மனித உரிமைக்கு எதிரானது என்பது குறித்தும், லஞ்சம், ஊழல் போன்றவை எவ்வாறு ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கின்றன என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
முகாமில், நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள், வக்கீல், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மைய வக்கீல், சட்ட கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.