/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குன்னத்துாரில் எரியூட்டு மையப்பணிகள் ஜரூர்
/
குன்னத்துாரில் எரியூட்டு மையப்பணிகள் ஜரூர்
ADDED : டிச 11, 2025 04:48 AM

குன்னத்துார்: குன்னத்துாரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 1.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடல்களை தகனம் செய்ய, காஸ் மூலம் எரியூட்டும் மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எரியூட்டு மையம், பொதுமக்கள் அமரும் ஹால், கழிப்பறை, அலுவலக அறை, ஆம்புலன்ஸ் நிறுத்தும் அறை என அனைத்து வசதிகளுடன் கட்டும் பணி ஜரூராக நடக்கிறது. எரியூட்டும் மயான பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும்10 சதவீத பணியே உள்ளது.
அந்த பணியும் நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் இறந்தால் அவர்களது உடல்களை எரியூட்ட தொலைவில் உள்ள பெருந்துறை அல்லது கோபிசெட்டிபாளையம் செல்ல வேண்டி உள்ளது.
எரியூட்டு மயானம் செயல்பாட்டுக்கு வந்தால் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், உடல்களை தகனம் செய்ய, வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை.

