நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
திருப்பூர் மாநகர தி.மு.க., வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிவகுமார். திருப்பூர் எம்.எஸ். நகரைச் சேர்ந்த அவர், நேற்று அக்கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் ஆகியவற்றிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
திருப்பூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் மாநில பொது செயலாளர் முருகானந்தம்,மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

