/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யுனிவர்சல் பள்ளி குழுமம் முப்பெரும் விழா கோலாகலம்
/
யுனிவர்சல் பள்ளி குழுமம் முப்பெரும் விழா கோலாகலம்
ADDED : ஜன 12, 2025 02:12 AM

திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் பள்ளிக் குழுமத்தின் பொங்கல் விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி மாணவ, மாணவியர் கும்மியாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிறுவனர், மறைந்த ராஜகோபால் எழுதிய 'வீழ்வேனென்று நினைத்தாயோ' நினைவு மலர் வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சிறப்பு நீதிபதி பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வெள்ளியங்காடு, வேலன் நகர் மற்றும் சேடபாளையம் ஆகிய மூன்று யுனிவர்சல் பள்ளிகளை சேர்ந்த பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்று, பொங்கல் வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் சிறப்புரையாற்றினார். கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 2024ம் கல்வியாண்டில், 600க்கு, 598 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி, மகாலட்சுமிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஸ்கூட்டி, உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

