/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்கலை குத்துச்சண்டை மாணவர்கள் அபாரம்
/
பல்கலை குத்துச்சண்டை மாணவர்கள் அபாரம்
ADDED : டிச 14, 2024 11:37 PM

திருப்பூர்: பாரதியார் பல்கலை, கல்லுாரி அணி, வீரர்களுக்கு இடையேயான, குத்துச்சண்டை போட்டி, பாரதியார் பல்கலை வளாகத்தில் நடந்தது.
மாநிலம் முழுதும் இருந்து, பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, வணிக நிர்வாகவியல் துறை, இரண்டாம் ஆண்டு மாணவர் ஹரிஹரன், 54 - -57 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். மாணவர் விஷால், 80 - 86 கிலோ எடை பிரிவில், வெள்ளி வென்றார்.
தங்கம் வென்றதன் மூலம், ஹரிஹரன், அகில இந்திய பல்கலை அணி, வீரர்களுக்கு இடையே நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். பல்கலை குத்துச்சண்டை போட்டியில், வெற்றி பெற்ற ஹரிஹரன், விஷால் இருவரையும் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் ராஜாராம், குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.