/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்கலை அளவில் பத்து... அத்தனையும் முத்து! சாதனை படைத்த எல்.ஆர்.ஜி., மாணவியரின் 'சக்தி' பல்கலை அளவில் பத்து... அத்தனையும் முத்து!

ADDED : செப் 25, 2024 10:44 PM

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கல்லுாரி மாணவியர், கோவை பாரதியார் பல்கலை தரவரிசைப் பட்டியலில், பத்து தங்கம் உட்பட, 45 பதக்கம் (முதல் பத்து இடங்களுக்குள்) கைப்பற்றி, சாதனை படைத்தனர்.
திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி மாணவியர் பாரதியார் பல்கலை தேர்வு முடிவில், பத்து பேர் முதலிடம் பெற்று, தங்கம் வென்றுள்ளனர். 35 பேர் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், இரண்டு முதல் பத்து இடங்களுக்குள் பெற்று, அசத்தியுள்ளனர்.
இளங்கலை பொறுத்த வரை கலைப்பிரிவில், எட்டு பேரும், அறிவியலில், 25 பேரும், முது கலையில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் தலா ஆறு பேர் வீதம், 12 பேர் உட்பட மொத்தம், 45 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.
சாதனை மாணவியர் விவரம் வருமாறு
முதலிடம் பெற்றவர்கள்: இளங்கலை பிரிவு - தேவதர்ஷினி (வரலாறு), ஐஸ்வர்யா (வேதியியல்), மோனிகா, நேமிகா (தாவரவியல்), மோகனா (விலங்கியல்), கோபிகா (உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்), ரஞ்சனி (இயற்பியல் சி.ஏ.,), முதுகலை பிரிவு - கோகுல பிருந்தா (வரலாறு), சவுந்தர்யா (விலங்கியல்), ேஹமலதா (கம்ப்யூட்டர் அறிவியல்)
வெற்றி பயணத்தில்மற்ற மாணவியர்
துர்காதேவி, திவ்யா (இளங்கலைதமிழ்), சண்முகபிரியா, கீர்த்தனா (முதுகலை தமிழ்), கீதா, திர்ஷியா (இளங்கலை பொருளியல்), வர்ஷினி (முதுகலை பொருளியல்), அகிலா, புவனேஸ்வரி, மோனிகா பிரியதர்ஷினி (இளங்கலை வரலாறு), எழில்மதி, ஆனந்தி (முதுகலை வரலாறு), கீதாஞ்சலி (இளங்கலை கணிதம்), தாரணி, ஜெயசித்ரா (முதுகலை கணிதம்), மோனிஷா.
அளியா (இயற்பியல்), ஐஸ்வர்யா, திவ்ய பிரபா (வேதியியல்), மகாலட்சுமி, கார்த்திகா, சவுமியா, ரம்யா, நதியா, அபிநயா, சத்யதாரணி (தாவரவியல்), அனுஷியா, பவித்ரா, மைதிலி, ரோஷினி நாச்சியார் (இளங்கலை விலங்கியல்), சவுந்தர்யா, மல்லிகா, சுவாதிஸ்ரீ (முதுகலை விலங்கியல்) செலின்வித்யா, பிரதீபா (உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்), விகாஷினி, கிருத்திகா (இயற்பியல் சி.ஏ.,)
பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற மாணவியர், முதல் பத்து இடங்களுக்கு பெற்ற மாணவியரை கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.