ADDED : மார் 13, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பிரகாஷ், காங்கயம் தாசில்தாரிடம் அளித்த மனு:
காங்கயம் நகர பகுதியில், ஐந்து டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதையொட்டி பார் செயல்படுகின்றது. இதற்கு, ஒப்பந்தம் டிச., 31 ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. கடைகளுக்கு, ஆறு மாதம் ஒப்பந்தம் நீடிப்பு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், யாரும் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், டாஸ்மாக் அதிகாரிகளின் துணையோடு, அரசுக்கு வரி செலுத்தாமல், எப்போதும் போலவே கடையை நடத்தி வருகின்றனர்.
இதற்கான தொகையை ஆளும்கட்சியினர் வசூல் செய்கின்றனர். எனவே, அனுமதி இல்லாமல் செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

