/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரியாத தெருவிளக்குகள் இருளில் குடியிருப்புகள்
/
எரியாத தெருவிளக்குகள் இருளில் குடியிருப்புகள்
ADDED : ஏப் 23, 2025 12:41 AM

உடுமலை, ; உடுமலை நகரின் பிரதான பகுதியாகவும், பரபரப்பான இடமாகவும் இருப்பது ராஜேந்திரா ரோடு. இப்பகுதியில்தான் வாரச்சந்தை, அரசுப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கும், போடிபட்டி உட்பட நகரையொட்டி உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜேந்திரா ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில், தெருவிளக்குகள் பலவும் பழுதடைந்துள்ளது. இதனால், மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் மக்கள் பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது.
அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும், இருள் சூழ்ந்திருப்பதைக்கண்டு அச்சப்படுகின்றனர்.
இப்பகுதி மட்டுமின்றி, நகர குடியிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு திருட்டு பயமும் ஏற்படுகிறது.
வளைவுகளில் திரும்பும் வாகன ஓட்டுநர்கள், எதிரே வரும் வாகனத்தை கவனிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.
தீவிர பாதிப்பு ஏற்படும் முன், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

