/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரப்பகுதியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம்
/
நகரப்பகுதியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம்
நகரப்பகுதியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம்
நகரப்பகுதியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம்
ADDED : செப் 18, 2024 08:46 PM
உடுமலை : உடுமலை - பழநி ரோடு நகரப்பகுதியில், நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
உடுமலை - பழநி ரோடு நெடுஞ்சாலையில், உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரோடு முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது.
கொல்லம்பட்டறை துவங்கி, கொழுமம் ரோடு பிரிவு வரை உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, ஐஸ்வர்யா நகர் பகுதிகளில் ரோட்டின் நடுவே குழியாக இருப்பதால், இரவு நேரங்களில் அதிகமான வேகத்துடன் வரும் வாகனங்கள், சீராக செல்ல முடியாமல் விபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ரோட்டின் குழிகளில் சிக்கி, மற்ற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். சில பகுதிகளில் குழி இருப்பதை அருகில் வந்தவுடன் மட்டுமே, அறிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது.
உடுமலை - பழநி ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், பஸ் ஸ்டாண்ட் வரை கார்கள் பாதி ரோடு வரை நிறுத்தப்படுகின்றன. பழநி ரோட்டின் துவக்கம் முதல் ஐஸ்வர்யா நகர் பிரிவு வரை, சரக்கு வாகனங்களும், கனரக வாகனங்களும் ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் அவ்வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் குழிகளிலும் சிக்கி, ஒதுங்கி செல்வதற்கும் வழியில்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இருப்பதில்லை. பழுதான சென்டர் மீடியன் விளக்குகளையும் மாற்றாததால், வாகன ஓட்டுநர்களுக்கு உடுமலை பகுதியை கடந்து செல்வது பெரும் சவாலாகவே மாறிவிட்டது.
நெடுஞ்சாலையை முழுமையாக பராமரிப்பதுடன், ஆக்கிரமிப்பையும் அகற்றி, உயர்மின் விளக்குகளை சரிசெய்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.